கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு கூடுதலாக 6 மாதம் விடுப்பு – கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பேறுகால விடுமுறையுடன் பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையைப் பார்த்துக் கொள்ள கூடுதலாக 6 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்த எடியூரப்பா, இந்த பட்ஜெட் வேளாண்மை, கல்வி சுற்றுலா மற்றும் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டிருப்பதாகவும் எடியூரப்பா தெரிவித்தார்.