அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் மூன்றாவது அணி என்பது சூப்பர் நோட்டா – கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் மூன்றாவது அணி என்றும் வெற்றி பெறாது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் . காங்கிரஸ் பெற்ற 25 தொகுதிகளில் எட்டு இடங்களை பெண்களுக்கும் நான்கு இடங்களை சிறுபான்மையினருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பிரதான கட்சிகள் மீது அதிருப்தியில் இருப்பவர்களே மூன்றாவது அணிக்கு வாக்களிப்பார்கள் எனக் கூறிய கார்த்தி சிதம்பரம், ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யும் நிலை இல்லாததால் மூன்றாவது அணி வெற்றி பெறாது எனக் கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம், மூன்றாவது அணி என்பது சூப்பர் நோட்டா என்றும் குறிப்பிட்டார்.