தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பரப்பில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் காற்றின் சுழற்சியின் காரணமான வருகிற 13 ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதன் பிறகு தெளிவாகவும் காணப்படும் என்றும், நகரில் அதிகப்பட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.