தமிழ்நாடு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் பயணமாக இன்று டில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முக்கிய அதிகாரிகள் வரவேற்றனர். விமானநிலையத்தில் வரவேற்பை முடித்துவிட்டு காரில் சென்னை கவா்னா் மாளிகைக்கு புறப்படடு சென்றார்.

இதையடுத்து நாளை காலை கவா்னா் மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமானநிலையம் வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வேலூா் புறப்பட்டு செல்கிறாா்.

அங்கு பொற்கோவிலுக்கு செல்கிறாா். அதன்பின்பு தனியாா் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு விழாவில் கலந்து கொள்கிறாா். பின்பு மாலையில் வேலூரிலிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமானநிலையம் வந்து காரில் கவா்னா் மாளிகை செல்கிறாா்.

11 ஆம் தேதி அன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டுவிட்டு,அன்று பிற்பகலில் சென்னையிலிருந்து தனி விமானத்தில் டில்லி செல்கிறாா்.

குடியரசு தலைவர் வருகையை ஒட்டி சென்னை விமானநிலையத்தில் சிறப்பு பாதுக்காப்பு படை அதிகாரிகள் பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.மேலும் 11 ஆம் தேதி மாலை வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.