வணிகம்

(10-03-2021) தங்கம் மற்றும் , வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் (10-03-2021) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4204ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 11 உயர்ந்த்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 33,616-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 88 உயர்ந்து ரூ. 33,720-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 71.10 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.30 விலை உயர்ந்து ரூ.71.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் மற்றும் செவ்வாய் காலை குறைந்து இருந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 168 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 88 விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து தங்கத்தில் விலை குறைந்து வந்ததால் சவரன் விலை 34,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்திருந்தாலும் சவரன் ரூ.33,720க்கு விற்பனையாகிறது.