விளையாட்டு

ஐசிசி-யின் பிப்ரவரி மாத சிறந்த வீரராக அஷ்வின் தேர்வு

பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் அஷ்வின் பெற்றுள்ளார்‍.

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்ந்தெடுத்து ஐசிசி விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கான விருது, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஜனவரி மாதத்திற்கான விருதை இந்தியாவின் ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்‍ என்பது குறிப்பிடத்தக்கது .