‘தேமுதிக’வுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு
தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேமுதிக தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால் அதிருப்தியடைந்த தேமுதிக நேற்று அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
இந்நிலையில், வருகிற தேர்தலில் தேமுதிக தனித்து களம் காணுமா? அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த சூழலில், அமமுக கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
தேமுதிக தொடங்கப்பட்ட 16 ஆண்டுகளில் இதுவரை 3 சட்டப்பேரவைத் தேர்தல்களையும், 3 நாடாளுமன்றத் தேர்தல்களையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது .