Covid19சினிமா

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் மோகன்லால்!

நாடு முழுவதும் 60 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் அரசியல் தலைவர்களும் கிரிக்கெட் பிரபலங்களும் சினிமா துறையினரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.

தமிழகத்தில், நடிகர் கமல்ஹாசன், ராதிகா, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், குஷ்பு, செல்வராகவன் உள்ளிட்டோர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

இந்நிலையில், மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் மோகன்லால் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.