இந்தியா

புதிய தேசிய கல்விக் கொள்கை மாற்றத்துக்கான நோக்கத்தைக் கொண்டது – குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதிய தேசிய கல்விக் கொள்கை மாற்றத்துக்கான நோக்கத்தை கொண்டுள்ளதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ராம்நாத் கோவிந்த், அங்கு பயின்ற 80 ஆயிரத்து 176 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில் தமிழக ஆளுநரும், திருவள்ளுவர் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித்தும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய தேசிய கல்விக்கொள்கை முறையில் படித்துவரும் மாணவர்கள், அதிக தன்னம்பிக்கையுடனும் எதிர்கால சவால்களை எதிர்க்கொள்ளும் திறன் உடையவராகவும் இருப்பார்கள் என தெரிவித்தார்.