அரசியல்

பாஜகவில் இணைந்தார் நகைச்சுவை நடிகர் செந்தில்

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளார் .

சென்னை பாஜக அலுவலகத்தில், பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் முன்னிலையில் நகைச்சுவை நடிகர் செந்தில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

அரசியலில் செந்தில் என்றால், இதுவரை அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக அறியப்பட்டு வந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அமமுகவில் இணைந்தார். அவர் அமமுகவின் அமைப்புச் செயலாளராக டிடிவி தினகரானால் நியமிக்கப்பட்டார்.

ஆனால், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டாததால் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து செந்தில் நீக்கப்பட்ட நிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்