கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் பழனிசாமி!
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுவரை மொத்தம் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். முதலமைச்சர் பழனிசாமிக்கு கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது.