காயத்திலிருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பினார் ரவீந்திர ஜடேஜா!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்தியாவுக்காக ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக ஜடேஜா திகழ்கிறார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியின் இடம்பெற்றிருந்த ஜடேஜா டெஸ்ட் தொடரின் போது விரலில் ஏற்பட்ட காயத்தினால் அந்த தொடரிலிருந்து விலகினார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சையும் அளிக்கபட்டது. இந்த காயத்தினால் இங்கிலாந்து அணிகக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் பயிற்சி களத்திற்கு திரும்பியதை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜடேஜா. “இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு பேட்டும், பந்தும் எடுப்பதில் மகிழ்ச்சி” என கேபிஷன் கொடுத்துள்ளார்.
அவர் மட்டுமல்லாது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களும் ஜடேஜாவின் கம்பேக்கை ஹேப்பியாக கொண்டாடி வருகின்றனர். 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஜடேஜா விளையாடுகிறார்.