மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்த ட்விட்டர் பதிவில் , குற்றம்புரிந்தவர்கள் உடனே சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஸ்டாலின், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் மமதா பானர்ஜி விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.