உதகையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் 6 மாதம் சிறை
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய பல இடங்கள் உள்ளன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை என நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ரூ.200 அபராதமும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.