கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் பிரதமர் மோடியின் தாயார்
தமது தாயார் ஹீராபென் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இதை தெரிவித்துள்ள அவர், தடுப்பூசி போட தகுதியுள்ளவர்களை ஊக்கப்படுத்துமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி தமது முதலாவது தடுப்பூசி டோசை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.