அரசியல்தமிழ்நாடு

அதிமுகவின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதிமுகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தாங்கள் போட்டியிடும் தொகுதியினை உறுதி செய்து வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது ஏற்கெனவே வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் விடுபட்டிருந்த பெயர்களை மூன்றாம் கட்டமாக வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரம்பலூர் தனி தொகுதியில் இளம்பை தமிழ்செல்வன் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர் தொகுதியில் அறிவுடைநம்பி களமிறக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வரும் சட்டப்பேரவை தேர்தலில், இதுவரை 178 வேட்பாளர்கள் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கப்படக்கூடிய நிலையில், போடியில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.