அரசியல்தமிழ்நாடு

இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி !

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் இன்று மாலை தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் . முதல் நாளான இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பரப்புரையை தொடங்க இருக்கிறார் .

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்வர் பழனிசாமி கடந்த ஜனவரி மாதம் தனது பரப்புரையை தொடங்கினார். அதனை தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளி பரப்புரையை முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டு வந்தார். இதனிடையே தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், அதிமுக கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு ஏற்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார்.