அரசியல்தமிழ்நாடு

பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் – எல்.முருகன்

பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி வேட்பாளர்கள் பட்டியல் குறித்து இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், தே.மு.தி.க, புதிய தமிழகம் கட்சிகள் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியதால் பாதிப்பு ஏற்படாது எனக்கூறினார். மேலும், வேட்பாளர் பட்டியல் குறித்து பா.ஜ.க மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அவர் தெரிவித்தார்.