அரசியல்தமிழ்நாடு

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றி உறுதி : மத்திய உள்துறை அமைச்சர் அமத்ஷா

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் காரக்பூரில் நேற்று மாலை நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த பேரணியில், ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பேசிய அமித்ஷா, மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.