அரசியல்தமிழ்நாடு

அதிமுக , பாஜக , பாமக கூட்டணி கட்சிகளின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாநில நிர்வாகிகளை ஒன்றிணைத்த தேர்தல் ஆலோசனை கூட்டம்!

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 2021-தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையியில் பாஜக, பாமக மற்றும் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தங்களது வெற்றியை உறுதிபடுத்திக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் துணை அமைப்பான தகவல் தொழில்நுட்ப பிரிவின் மூலம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளின் தேர்தல் பணியை ஒருங்கிணைத்து, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறவைக்கும் நோக்கில், அஸ்பயர்.கே.சுவாமிநாதன் ஏற்பாட்டில் மேற்படி கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த மற்ற மண்டல நிர்வாகிகள், தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்மல் குமார் மற்றும் அவரது குழுவினர், பாமகவை சேர்ந்த டாக்டர். சாம் பால் மற்றும் அவரது குழுவினர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு அதிமுக கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப பிரிவினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டமுடிவில் “திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.