விளையாட்டு

டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அர்ஜுனா விருது வென்றுள்ள இவர் தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.