உலகம்

ரஷியாவில் போர் விமான விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!

ரஷ்யா நாட்டில் போர் விமானம் புறப்படும் முன்பு விமானத்தை ஆய்வு செய்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென விமானம் வெடித்ததில் மூன்று விமானிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேற்கு-ரஷ்யாவில் உள் கலுகாவிலே நகரத்தில் அணு குண்டுவீச்சு டியு 22 எம் 3 என்கிற போர் விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது. அப்போது அந்த விமானத்தின் மூன்று விமானிகள் விமானத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் திடீரென விமானம் மேலே பறக்க துவங்கியது. இருக்கையில் இருந்த விமானிகளும் மேல் நோக்கி பறந்தள்ளனர். அந்த விமானம் கீழே விழுந்ததில் மூன்று விமானிகளும் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தள்ளனர்.