சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக ஒரு கவசம் – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!
சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக ஒரு கவசமாக இருக்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் கேபி. அன்பழகனுக்கு ஆதரவாக நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர்; மத்திய மற்றும் மாநில அரசுகளில் பல ஆண்டுகளாக பதவியில் இருந்த திமுகவால் மக்களுக்கு எந்த உபயோகமும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார். இது வரை அதிமுக அரசுதான் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகமான இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு உள்ளது. தமிழ் நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்வதற்கு உதவியாக ரூபாய் 6 கோடியில் இருந்து ரூபாய் 10 கோடியாக உயர்த்தி வழங்கி உள்ளோம் என தெரிவித்தார்.
சென்னையில் ஹஜ் கட்டுவதற்கு 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களை சீர் அமைப்பதற்கு ரூபாய் 5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் நாட்டில் சிறுபான்மை மக்களிடம் அதிமுகவுக்கு நல்ல பெயர் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.