இந்தியா

நீர் பாதுகாப்பில் பெண்களை செயல்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு “மழை நீரை சேகரிப்போம்” என்ற பிரச்சாரத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதில் பேசிய பிரதமர் மோடி; இந்தியாவில் ஏராளமான மழை நீர் வீணாகிறது.. இதை அதிக அளவில் பாதுகாப்பதற்கு நிலத்தடி நீரை குறைந்த அளவில் உபயோகப்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும். இதனால் நீர் பாதுகாப்பு முயற்சியில் பெண்களை ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டார்.

நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பெருமளவில் ஏற்படுத்தவும் மற்றும் அதிக அளவில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.மழைநீர் சேகரிப்பு பிரச்சாரம் வெற்றி அடைவது மிகவும் அவசியமானது.

இந்தப் பிரச்சாரத்தை நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் சென்றடைய வேண்டும் என்பது மிக முக்கியம். நம் நாட்டின் நீர் பற்றாக்குறையில் இருந்து காப்பாற்றுவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் அடுத்துவரும் 100 நாட்களுக்கு மழை நீரை பாதுகாக்க இந்த திட்டத்தின் பணிகள் நடைபெற வேண்டும்.

இந்த ஜல் ஜீவன் இயக்கத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் பெண்கள் கொண்டு செல்ல வேண்டும். இதனால் நீர் பாதுகாப்பில் பெண்கள் முழுமையாக செய்யப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.