அரசியல்இந்தியா

பாஜக ஆட்சியை பிடித்தல் மம்தா ஊழல் வெளியாகும் – அமித்ஷா காட்டம்!

வருகிற மார்ச் 27ஆம் தேதி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த சட்டமன்ற தேர்தலில் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அந்த தினமே அறிவிக்கப்படுகிறது. இதனால் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மேற்கு வாங்கலாம் தெற்கு பர்ஹானா மாவட்டம் கோஷாபா என்ற இடத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியது; மம்தா பானர்ஜி கடந்த தேர்தலில் 282 வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால், அதில் 82 வாக்குறுதிகளை கூட அவர் நிறைவேற்றவில்லை. ஏழை மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி 115 சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அந்த திட்டத்திலும் மம்தா முறைகேடு செய்துள்ளார்.

மேலும், பேசிய அமித்ஷா; மக்களின் பணம் சூறையாடப்பட்டுள்ளது. நிவாரணம், மறுவாழ்வு போன்ற திட்டங்களுக்காக ரூபாய் பத்தாயிரம் கோடி அளவிலான உதவிகளை மத்திய அரசு செய்து உள்ளது. அந்த பணம் எல்லாம் சூறையாடப்பட்டுள்ளது என கடுமையாக சாடினார்.

மேற்கு வங்காளத்தில் மூன்று முறை புயல் வீசி மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதற்கு மத்திய அரசு மத்திய அரசு பல உதவிகளை செய்து உள்ளது. பின்னர், சுந்தரவனக் காடுகளை மேம்படுத்திட 1000 கோடி கொடுத்து உள்ளோம் அதுவும் என்ன ஆனது என்று தெரியவில்லை என அமித்ஷா தெரிவித்தார்

இதனால், மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தால் மம்தா செய்த முறைகேடுகளை விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.பின்பு மம்தாவின் உறவினர்கள் சிறைக்கு செல்வார்கள் என அமித்ஷா எச்சரித்துள்ளார்.