ஏப்ரல் 2 பிரதமர் மோடியுடம் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் – வெற்றி நடைபோடும் தமிழகம்!
ஏப்ரல் 2ஆம் தேதி மதுரையில் நடக்க உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மின்னல் வேகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஒரே மேடையில் பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஏப்ரல் 2ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.