அரசியல்இந்தியா

மேற்கு வங்காள மக்களின் நலனுக்காக தீவிரமாக பாடுபடுவோம் – பிரதமர் மோடி!

மேற்கு வங்காள மக்களின் நலனுக்காக தீவிரமாக உழைப்போம் என பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வருகிற மார்ச் 27ஆம் தேதி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அந்த தினமே அறிவிக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இன்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பங்கேற்றார்.

இதில் பேசிய பிரதமர் மோடி; மே 2ம் தேதி மேற்குவங்காளத்தில் புதிய மாற்றம் ஏற்படும் மம்தா பானர்ஜி வீட்டுக்கு அனுப்பப்படுவார். திரிணாமுல் காங்கிரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு தாய்மார்களும் சகோதரிகளும் பெருமளவில் முன்வந்துள்ளனர்.

மத்திய அரசால் கொடுக்கப்பட்ட நிவாரணம் மம்தாவின் மருமகனிடம் மாட்டி கொண்டது. திரிணாமுல் காங்கிரஸின் விளையாட்டு முடிவடைந்து, மேற்கு வங்காளத்தில் புதிய மாற்றம் துவங்கும். மேற்கு வங்காள மக்களின் நலனுக்காக பாஜக அயராமல் உழைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் மக்களின் எதிர்காலத்திற்காக பாஜக கடுமையாக பாடுபடும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டார்.