டி20 தரவரிசை பட்டியலில் வேகமாக முன்னேறிய விராட் கோலி!
ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேகமாக 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி t20 தரவரிசை பட்டியல் இன்று வெளியாகியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 80 ரன்கள் விளாசிய விராட் கோலி டி20 தரவரிசை பட்டியலில் 4வது இடத்திற்கு வேகமாக முன்னேறி உள்ளார்.
இதன் பின்பு அந்தப் போட்டியில் 34 பந்துகளில் 64 ரன்கள் அடித்த ரோகித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 14 வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் 21 இடங்கள் முன்னேறி 24 இடத்தையும் மற்றும் ஹர்திக் பாண்டிய 47 இடங்கள் முன்னேறி 78 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில், இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 98 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் 2 இடங்கள் முன்னேறி 15 இடத்தை பிடித்துள்ளார் மற்றும் பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் 5 இடங்கள் முன்னேறி 15 வது இடத்தை பிடித்துள்ளார்.