அரசியல்தமிழ்நாடு

திமுக ஆட்சியில் அராஜகம் நடக்கும் – முதல்வர் பழனிசாமி தாக்கு!

திமுக அராஜகமான ஆட்சியை நடத்தும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று மதுரை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் பிரச்சாரத்தில் பேசியது; தமிழ் நாட்டில் சட்டத்தின் வழியில் தான் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது.

மதுரை கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் ஒரு அராஜகம் செய்பவர். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் அமைதியானவர்கள், பண்பாளர்கள், அன்பானவர்கள் மக்களிடம் நன்மையாக நடப்பவர்கள் என தெரிவித்தார்.கடந்த 50 ஆண்டுகளில் தற்போது தான் நீர்நிலைகள் நிரம்பி காட்சி அளிக்கிறது.

திமுக என்றாலே அராஜகம் பிடித்த கட்சி அவர்கள் ஆட்சிக்கு வந்தாலே கட்டப்பஞ்சாயத்து, நிலம் போன்றவை அபகரிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.