குஷியில் இந்தியா கிரிக்கெட் வீரர்கள்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றியை இந்தியா வீரர்கள் ஒன்றிணைந்து கொண்டாடினர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதன் பின்பு 5 ஆட்டங்களான 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இதன் பின்னர் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஷிகர் தவான் 98 ரன்கள் அடித்தார்.
மேலும், அறிமுக போட்டியில் குறைந்த பந்தில் குர்னால் பாண்டிய அரை சதம் அடித்தார். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியை கேப்டன் விராட் கோலி, ரோகித்சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா,குர்னால் பா பாண்டியா, கே.எல்,ராகுல், சஹால் உள்ளிட்ட வீரர்கள் ஒன்றிணைந்து மதிய உணவை சாப்பிட்டு கொண்டாடினர். இவர்களுடன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இணைந்து கொண்டாடினார்.

மேலும், நாளை நடக்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.