தமிழ்நாடு

எம்.எல்.ஏ கருணாசை வீட்டுகாவலில் கைது செய்த காவல்துறை!

சிவகங்கை மாவட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எம்எல்ஏ கருணாஸ் காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்வானார்.தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து கருணாஸ் விலகினார். பின்பு மார்ச் 10ஆம் தேதி திமுக கூட்டணிக்கு ஆதரவு என தெரிவித்தார்‌.

ஆனால், கருணாஸ் உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மற்றும் தொகுதிகள் ஒதுக்குவதற்கும் முன்வரவில்லை. இதனால் அடுத்த நாளே திமுகவுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றார்.இதன் பின்பு, சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை என அறிவித்தார்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிந்த காவல்துறை இன்று பிற்பகல் எம்எல்ஏ கருணாசை வீட்டுக்காவலில் கைது செய்தனர்.