விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதன் பின்பு 5 ஆட்டங்களான 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

தற்போது முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி முதல் பேட்டிங் செய்தது. இதில் விராட் கோலி 66 ரன்னும், கே.எல். ராகுல் 108 ரன்னும், ரிஷப் பந்த் 77 ரன்னும் அடித்தனர். இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் அடித்தது.

பின்பு களம் இறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்க ஆட்டக்காரனான ஜானி பேர்ஸ்டோவ் 124 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 99 ரன்களும் அடித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.