அரசியல்தமிழ்நாடு

எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை; திமுகவை வீழ்த்துவதே முக்கியம் – முதல்வர் பழனிச்சாமி!

என்னுடைய தொண்டை போனாலும் சரி, உயிர் போனாலும் சரி பரவாயில்லை. திமுகவை விழ்த்துவதே முக்கியம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். அதில் பேசிய அவர்; இந்த தேர்தலில் திமுகவை விழ்த்துவதே முக்கியம். அதனால் என்னுடைய தொண்டையை போனாலும் சரி, உயிர் போனாலும் சரி பரவாயில்லை என தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எந்த நேரமும் என்னை பற்றி தான் ஸ்டாலின் சிந்தித்து வருக்கிறார். பெண்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பது அதிமுக அரசுதான். இதனால் இந்தத் தேர்தலில் திமுக என்கிற குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், சட்டசபையில் திமுக அராஜகம் செய்தார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ன ஆகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.