புதுச்சேரியில் மகாகவிக்கு 150 அடியில் சிலை; பெண்களுக்கு கல்வி இலவசம் – அசத்தும் பா.ஜ.க தேர்தல் அறிக்கை!
புதுச்சேரியில் மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கு 150 அடியில் சிலை மற்றும் பெண்களுக்கு இலவச கல்வி என பல அம்சங்களை கொண்ட அறிக்கையாக பாஜக தேர்தல் அறிக்கை உள்ளது.
புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் இருக்கும் 30 தொகுதிகளில் என்.ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதனிடையே புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில்;
9ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டேப்லெட்.
மழலையர் முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்.
மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கு 150 அடியில் சிலை வைக்கப்படும்.
மகளிர் அனைவருக்கும் இலவச போக்குவரத்து வசதி தரப்படும்.
விண்ணப்பித்த 15 நாட்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு.

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.
புதிதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு வாரியம் அமைக்கப்படும்.
விவசாயிகளின் வருமானம், மீனவர்களின் வருமானம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.
மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி தரப்படும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், பாஜக அறிக்கையில் இன்னும் பல சிறப்பான திட்டங்கள் உள்ளது.
பின்பு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்; புதுச்சேரியில் 51 சதவீதம் பெண்கள் உள்ளனர். அதனால் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
.