தமிழ்நாடு

வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகை நமீதா கோவையில் பிரசாரம் – வானதி கம்மிங்!

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த பிரச்சாரத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள “வாத்தி கம்மிங்” பாடலுக்கு இளைஞர்களுடன் வானதி சீனிவாசன் மற்றும் நடிகை நமீதா நடனமாடினார்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே இன்று வானதி சீனிவாசன் ஆதரித்து நடிகை நமீதா கோவை தெற்கு தொகுதியில் மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதில் அவர் பேசியது; பிரதமர் மோடி அவர்களின் சிறப்பான திட்டங்களை இந்த தொகுதி முழுவதும் வானதி சீனிவாசன் சேர்த்துள்ளார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல நல உதவிகளை செய்துள்ளார்.

இந்த கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். பின்னர் நடிகை நமீதா மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்கள். தமிழ்நாட்டில் தாமரை மலரும் என தெரிவித்தார்.