மக்களை குழப்பும் ஸ்டாலின் – முதல்வர் பழனிசாமி விமர்சனம்!
இன்று நாகர்கோவில் செட்டிகுளத்தில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தேர்தலில் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவிலில் பேசிய முதல்வர்; நடக்கவிருக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, குளச்சல் குமரி பா.ரமேஷ், கன்னியாகுமரி கழக வேட்பாளர் தளவாய் சுந்தரம், பத்மநாபபுரம் ஜாண்தங்கம், விளவங்கோடு பா.ஜ.க. வேட்பாளர் ஜெயசீலன், கிள்ளியூர் ஜூட் தேவ் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் அனைவரும் வாக்களியுங்கள். முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இதற்கு முன்பு இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர். அவர் மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செய்துள்ளார்.
மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணன் அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என தெரிவித்தார்.
பின்பு பேசிய முதல்வர்; எதிர்க்கட்சியினர் தவறான, அவதூறான செய்திகளை பரப்பி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை குழப்பி தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறார். திமுக மற்றும் காங்கிரஸ் மக்களிடம் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழநிசமாய் விமர்சித்துள்ளார்.