காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக – முதல்வர் பழனிசாமி சாடல்!
கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் ஊழல் செய்த கட்சி திமுக என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தேர்தலில் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். இதனால் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்; காற்றிலும் ஊழல் செய்த கட்சி திமுக. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நன்மை செய்வார்களா. ஸ்டாலின் வதந்திகளை தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லிக் கொண்டு வருகிறார் என முதல் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.