நடனமாடி வானதி ஸ்ரீனிவாசனுக்கு வாக்கு சேகரித்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி!
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து இன்று கோவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தேர்தலில் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக தொண்டர்களுடன் இணைந்து ஸ்மிருதி இரானி கோலாட்டம் நடனமாடி மக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்பு பேசிய அவர்; கமலஹாசன் பாஜக வேட்பாளரான சீனிவாசனுடன் நேரடி விவாதம் செய்ய வேண்டும் அப்போது தான் கொள்கைகள் பற்றி தெரியும் என தெரிவித்தார்.