மேற்கு வங்காளம், அசாமின் தேர்தல் வாக்கு பதிவு நிலவரம்!
மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவின் மாலை 6 மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் 79.79 சதவீதமும் மற்றும் அசாம் மாநிலத்தில் 72.14 சதவீதம் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளில் முதல் கட்டமாக 30 தொகுதிகளில் இன்று வாக்கு பதிவு நடைபெற்றது. இதனை போல் அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளில் முதல் கட்டமாக 47 தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெற்றது.
இதை தொடர்ந்து இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தின் 40.73% மற்றும் அசாம் மாநிலத்தில் 37.47 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மேலும், இன்று மாலை 6 மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் 79.79 சதவீதமும் மற்றும் அசாம் மாநிலத்தில் 72.14 சதவீதமும் வாக்கு பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைவரும் கொரோனா வரைமுறைகளை பின்பற்றி ஆர்வத்துடன் வாக்களித்து உள்ளனர்.