விளையாட்டு

ஒருநாள் தொடரை கைப்பற்ற போவது யார்?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதன் பின்பு 5 ஆட்டங்களான 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

தற்போது முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நாளை மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதனால் இந்த தொடரை கைப்பற்ற போவது யார் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.

இந்த தொடரை வெல்ல இந்தியா அணியும், இங்கிலாந்து அணியும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். ஆகவே நாளை பொறுத்து இருந்து பார்ப்போம்.