விளையாட்டு

ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி – விறுவிறுப்பான ஆட்டம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதன் பின்பு 5 ஆட்டங்களான 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

தற்போது முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில், இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 78 ரன்கள், ஷிகர் தவான் 67 ரன்கள், ஹர்திக் பாண்டியா 64 ரன்கள் எடுத்தனர்.

பின்பு, 330 ரன்கள் என்ற இலக்கை முன்வைத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் மூன்று ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதில் டேவிட் மலன் 50 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின்‌ சாம் கரான் இறுதிவரை தன் அணியை வெற்றிபெறச் செய்ய போராடினார். ஆனால் இங்கிலாந்து அணியால் முடியவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.

இதனிடையே இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டெஸ்ட் தொடர், t20 தொடர், ஒருநாள் தொடர் ஆகிய மூன்றையும் கைப்பற்றியது.