அரசியல்தமிழ்நாடு

திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருண்ட மாநிலமாக இருந்தது – முதல்வர் பழனிசாமி தாக்கு!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தேர்தலில் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அந்த பிரச்சாரத்தில் அவர் பேசியது; சென்னையில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும். 62,000 கோடியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை சென்னையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் கொண்டுவந்தார்.

மேலும் பேசிய அவர், திமுக ஆட்சியில் தான் தமிழகம் இருண்ட மாநிலமாக இருந்தது. 2011 அதிமுக ஆட்சி வந்தவுடன் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் மக்கள் நலமாகவும் நிம்மதியாகவும் இருக்கின்றனர். வெற்றி நடை போடும் தமிழகமே என்கிற வாசகத்தை கேட்டால் ஸ்டாலின் பயப்படுகிறார்.

நான் நினைப்பதை சாதிக் சாதிப்பேன். எனக்கு பயம் கிடையாது. அதிமுக ஆட்சியில் ரவுடிகளின் அராஜகம் கிடையாது, கட்டப்பஞ்சாயத்து கிடையாது, எனவே அதிமுக வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரை வெற்றி பெற செய்யுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.