விளையாட்டு

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி பல முறை 100 ரன்னுக்கு மேல் அடித்த ரோகித் சர்மா – தவான் ஜோடி!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதன் பின்பு 5 ஆட்டங்களான 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. பின்பு விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா – ஷிகர் தவான் களம் இறங்கினார். இதில் முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்தது.

இது வரை ரோகித் சர்மா – ஷிகர் தவான் ஜோடி 17 முறை துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி முதல் விக்கெட்டுக்கு முன் 100 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனார்.

சௌரவ் கங்குலி – சச்சின் தெண்டுல்கர் ஜோடி தான் முதல் விக்கெட்டுக்கு அதிக பட்சமாக 21 முறை 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது. இந்த ஜோடி முதல் இடத்தை பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் – மேத்யூ ஹைடன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16 முறை 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது.