அரசியல்தமிழ்நாடு

சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் மக்களுக்கு என்ன செய்தார் – முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு!

சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, அவர்களின் குறைகளைத் தீர்க்க வில்லை என முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இன்று சென்னை மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் நடராஜனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியது; அதிமுகவினர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவை சேர்ந்தவர்கள் தவறான கருத்துக்களை பேசிய வருகின்றனர். அதிமுகவின் சாதனைகள் நன்மைகள் நாங்கள் சொல்லி கொண்டு வருகிறோம்.திமுக ஆட்சியில் கொள்ளை, கொலை, திருட்டு போன்ற கொடிய சம்பவங்கள் தான் நடைபெற்று உள்ளது. அதை முடிவுக்குக் கொண்டு வந்து சிறப்பான ஆட்சி தந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர் மக்களுக்காக பல நன்மைகளை செய்து உள்ளார்.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக இருந்தால் தான் விருது கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பாகவும், மக்கள் நலமுடன் வாழ்கின்றனர். மேலும், சென்னை மேயராக பதவியில் இருந்த ஸ்டாலின் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, அவர்களின் குறைகளையும் தீர்க்க வில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.