பெண்குலத்தை அவமதிப்பதே திமுகவின் வேலை – பிரதமர் மோடி சாடல்!
பெண்குலத்தை அவமதிப்பதே திமுக மற்றும் காங்கிரஸ் வேலையாக வைத்துள்ளது என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
தமிழக சட்ட மன்ற தேர்தலை அதிமுக உடன் இணைந்து பாஜக எதிர்கொள்கிறது. இந்த கூட்டணியில் பாமக, தாமக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம் உள்ளது.
இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு “வேல்” பரிசாக பாஜக தலைவரும் மற்றும் தாராபுரம் வேட்பாளருமான எல்.முருகன் வழங்கினார். இந்தப் பொது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி; “வெற்றி வேல் வீர வேல்” என்கிற கோஷத்துடன் உரையைத் தொடங்கினார். உலகின் மிக பழமையான, தெண்மையான தமிழ் மொழியில் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் கலாச்சாரத்தை பார்த்து நம் நாடே பெருமை கொள்கிறது.வருகின்ற சில நாளில் எம்.எல்.ஏக்களை தேர்வு செய்வதற்கு மக்கள் தயாராக உள்ளனர். மக்களுக்கு சேவை செய்வதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி உங்கள் ஆதரவை கேட்கிறது. நாங்கள் ஒன்றிணைந்து நம் நாடு வளர்ச்சி அடைய பல திட்டங்களை கொண்டு வாக்கு சேகரிக்கிறோம். விவசாய மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல சிறப்பான திட்டங்கள் அறிவித்துள்ளோம். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நிதி உதவி திட்டம் அறிவித்துள்ளோம்.

மேலும், முதல்வர் தாயாரை தரைகுறைவாக திமுக – காங்கிரஸ் கூட்டணி பேசியது மிக கண்டிக்கத்தக்கது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்பதே கேள்வி கூறித்தான். திமுக-காங்கிரஸ் கூட்டணி பெண்குலத்தை அவமதிப்பதே வேலையாக வைத்துள்ளது என பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.