அனைத்து வேட்பாளர்களையும் பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் – முதல்வர் இ.பி.எஸ்!
234 தொகுதியின் அனைத்து வேட்பாளர்களையும் பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என முதல்வர் எடப்பிடி பழனிசாமி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
தமிழக சட்ட மன்ற தேர்தலை அதிமுக உடன் இணைந்து பாஜக எதிர்கொள்கிறது. இந்த கூட்டணியில் பாமக, தாமக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம் உள்ளது.
இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இவருடன் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் கலந்து கொண்டு பேசினார்கள்.
அப்போது பேசிய முதல்வர்; நம்நாடு உயர்வதற்கு பிரதமர் மோடி அயராமல் உழைக்கிறார். நம் நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதற்கு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறார். தமிழக மக்கள் மீது பிரதமர் அன்பு கொண்டுள்ளார். தமிழ் நாட்டுக்கு தேவையான சிறப்பான திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது.

உலக அளவில் இந்திய நாடு உயர்வதற்கு பிரதமர் மோடியின் தீவிர உழைப்புதான் காரணம்.
234 தொகுதியின் அனைத்து வேட்பாளர்களையும் பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என மக்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.