ஆர். ராசாவுக்கு பின்னால் மு.க ஸ்டாலின் இருக்கிறார் – எல்.முருகன் தாக்கு!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி =யின் தாயை தரைகுறைவாக பேசிய ஆர்.ராசாவுக்கு பின்னால் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று எல் முருகன் அளித்த பேட்டி அளித்தார். அதில், இதுவரை தாராபுரம் தொகுதிக்கு எந்த பிரதமரும் வருகை தந்ததில்லை. தற்போது முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி தான் தாராபுரத்துக்கு வருகிறார். இந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மூத்த தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என தெரிவித்தார். பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை தரக்குறைவாக பேசிய ஆர்.ராசாவுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன். ஆர். ராசா மீது திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆர். ராசாவின் பின்னால் ஸ்டாலின் இருக்கிறார். இதனால் மக்கள் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தார்.