இந்தியா

எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு தலைவருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி!

இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நடந்த “பைபாஸ்” அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணத்தினால், டெல்லியில் இருக்கும் இராணுவ மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இதன் பின்பு மேல் சிகிச்சை அளிப்பதற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அந்த மருத்துவமனையில் அவருக்கு நடந்த பரிசோதனைக்கு பின்பு, அவருடைய இதயத்தில் “பைபாஸ்” அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் இன்று குடியரசு தலைவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது எனவும் அவருடைய உடல்நிலை சீராக உள்ளது எனவும் மருத்துவமனை தகவல் தெரிவித்தது.

இந்நிலையில், இதை பற்றி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவ குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமணையில் நடந்த பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்துள்ளது.

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழவுக்கு வாழ்த்துகள். குடியரசு தலைவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க எய்ம்ஸ் இயக்குநரிடம் பேசினேன். அவரது நல்வாழ்வு மற்றும் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.