டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே மூன்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் கடந்த 23ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போது பீல்டிங் செய்து இருந்த போது ஷ்ரேயாஸ் அய்யரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதை அடுத்து உடனே ஷ்ரேயாஸ் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருடைய தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் இரண்டு ஒருநாள் போட்டி மற்றும் மொத்த 2021 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.
ஐபிஎல் போட்டி வருகிற 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது காயத்தால் வெளியேறினார். இதனால் யார் கேப்டன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதனிடையே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக விக்கெட் கீப் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.