அரசியல்

அதிமுக டெபாசிட் வாங்காத அளவுக்கு தேர்தல் வேலைகள் இருக்க வேண்டும் – மு.க ஸ்டாலின் பிரச்சாரம்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த தேர்தலில் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதில் அவர் பேசியது; அதிமுக வெற்றி பெற்றால் பாஜகவாக இருப்பார்கள். இதனால் அதிமுக டெபாசிட் வாங்காத அளவுக்கு தேர்தல் வேலைகள் இருக்க வேண்டும் என தெரிவித்தார். தேர்தல் கருத்துக் கணிப்புகள் நமக்கு சாதகமாக இருந்தாலும் திமுக தொண்டர்கள் தேர்தல் வேலையை செய்யாமல் விட்டு விடக் கூடாது. தீவிரமாக பணிகளைச் செய்ய வேண்டும்.

திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் ஊழலை மக்களிடம் வெளிப்படுத்துவோம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றியை பெறும். திமுக ஆட்சி வந்தவுடன் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.